பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அவர்களது கணவர்கள், காதலர்களால் கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைப் பொறுத்தவரைக்கும், நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருவதாக அங்குள்ள பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் 100 பெண்கள் அவர்களது துணைகள் (கணவர்கள், காதலர்கள்) அல்லது முன்னாள் துணைகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புத்தாண்டு பிறந்த நேரத்தில் மட்டும் 3 பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
புத்தாண்டு நேரத்தில் 27 வயது பெண் ஒருவர் இராணுவ அதிகாரியான தனது காதலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, 113 பெண்கள் கடந்த வருடத்தில் மட்டும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment