பல கோடி சொத்துக்களை செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்த பெண்

tamilni 435

பல கோடி சொத்துக்களை செல்லப்பிராணிகளுக்கு எழுதி வைத்த பெண்

சீனாவில் மூதாட்டியொருவர் தனது பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, சீனா – ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ என்ற மூதாட்டியே இவ்வாறு தனது சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

குறித்த மூதாட்டி தனக்கு சொந்தமான சுமார் 23 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முதலில் தனது 3 குழந்தைகளும் பங்கீடும் வகையில் உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து அவரது குழந்தைகள் மூவரும் அவரை புறக்கணித்தமை அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கோபமடைந்த அடைந்த அவர் தனது சொத்து மதிப்புக்கள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய் மற்றும் பூனைக்கு எழுதி வைத்துள்ளார்.

இதையறிந்த அவரது குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அவர்கள் நம்பிக்கையான ஒருவரை தேர்ந்தெடுத்து கால்நடை மருத்துவமனை ஆரம்பித்து நாயையும், பூனையையும் நன்கு பராமரிக்க ஒரு விலங்குகள் நல நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version