27 4
உலகம்செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் முழுமையாக நிறுத்தம்..!

Share

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி, ஜம்மு மற்றும் பதன்கோட்டில் மேற்கொள்ளப்படும் என்று விடுக்கப்பட்ட விமானத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது,

இந்தநிலையில்; இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகின்றமையால், ஐபிஎல்லின் முழு போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களால் பாதுகாப்பு கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இது தொடர்பில் அறிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, திடீரென்று மின்சார விளக்குகள் அணைந்தன.

இதனையடுத்து, அணிகளின் வீரர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பு கருதி மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த மைதானத்தின் கொள்ளளவு 23,000 பேர் என்ற நிலையில், வெளியேற்றப்பட்டபோது சுமார் 80 சதவீத இரசிகர்கள் அங்கு கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மொரட்டுவையில் திருமண நாளன்று இளைஞர் கொலை: மூவர் கைது!

மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை...

12 11
செய்திகள்இந்தியா

கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரானிய போர்க்கப்பல்: கடல்சார் ஒத்துழைப்பில் புதிய மைல்கல்!

இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, ஈரானிய...

11 11
செய்திகள்அரசியல்இலங்கை

மத்திய கிழக்கு போர்ச் சூழல்: இலங்கையின் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் சஜித் பிரேமதாசவின் 4 முக்கிய பரிந்துரைகள்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தக்கூடிய...

09 11
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக இந்தியக் கப்பல்கள்: ஈரான் அனுமதி வழங்கியதாகத் தகவல்; ஆனால் டெஹ்ரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் எண்ணெய் கொள்கலன்களை (Oil...