35
உலகம்செய்திகள்

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

Share

சொத்து மதிப்பு மட்டுமே ரூ.5705 கோடி! இந்திய அமைச்சரவையில் பணக்கார எம்.பி யார்?

மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில், அவரது அமைச்சரவையில் இருக்கும் பணக்கார எம்.பி யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

கடந்த ஜூன் 9 -ம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் வலுவான இடத்தை பிடித்துள்ளது.

நடந்த முடிந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் நட்சத்திர வேட்பாளர்களும் கோடீஸ்வர வேட்பாளர்களும் களமிறக்கப்பட்டனர்.

அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியாகி புதிய அமைச்சரவையில் இடம்பெற்று 99% பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர். அதில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளது.

ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அமைச்சரவையில் உள்ள 71 அமைச்சர்களில் 70 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களின் சொத்துமதிப்பு சராசரியாக ரூ.107.94 கோடி ஆகும்.

அதில் முக்கியமாக என்.டி.ஏ கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் சார்பில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சரான சந்திர சேகர பெம்மசானியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5705.47 கோடி ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 71 அமைச்சர்களில் 28 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...