உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காங்கோ நாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றும் போதே இவ்வாறு பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆபிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு ஊழியர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டனர்.
அவர்கள் அங்கு பல்வேறு இடங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இவ்வாறு அங்கு 199 இற்கும் மேலான ஊழியர்கள் ஆங்காங்கே சிகிச்சை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டனர் எனத் தெரியவந்துள்ளது.
அதில் உலக சுகாதார ஊழியர்கள் 9 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியாகியுள்ளது.
அத்துடன் 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் எனவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செயல்களில் ஈடுபட்டனர் என 83 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானம் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
.
Leave a comment