எங்கே பெங் ஷூவா?-சீனாவை சந்தேகிக்கும் பிரித்தானியா

Peng Shua

Peng Shua

எங்கே பெங் ஷூவா என சீனாவை பிரித்தானியா கேட்டுள்ளது.

சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா குறித்த உறுதியான தகவல்களை வெளியிடுமாறு பிரித்தானியா, சீனாவை கோரியுள்ளது.

சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பிரதி தலைவரினால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படும் டெனிஸ் வீராங்கனையினால் முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது காணாமல் போயுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவா காணாமல்போன விடயம் குறித்து தாம் மிகவும் கவலைகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு, இந்த விடயம் தம்மால் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும் பிரித்தானிய தெரிவித்துள்ளது.

குறிப்பாக பாலியல் வல்லுறவு போன்ற விடயங்களில் பொதுமக்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எனவும்,

உலகின் எந்தப் பகுதியிலும் பாலியல் வல்லுறவு போன்ற மனித உரிமை மீறும் சம்பவங்களுக்கு எதிராக பிரித்தானியா தொடர்ந்தும் செயற்படும் எனவும் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

டெனிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் குறித்து, முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினாலும் கண்டனம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

35 வயதான பெங் ஷூவாய் இரு முறை இரட்டையர் போட்டிகளில் கிறாண் சிலாம் வெற்றிக்கிண்ணத்தை வென்றிருந்தார் .

அவர் குறித்த விபரங்களை சீனா வெளியிட வேண்டும் என சர்வதேச நடுகல் பலவும் சீனாவுக்கு அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version