பத்ம விருதுகளை ஏற்க மறுத்த மேற்குவங்க பிரபலங்கள்!!

List of Padma Awards 2022 e1643208047930

இந்திய நாட்டின் 73வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியல் இடம்பெற்றிருந்தது. எனினும் எனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து அவரது மகள் சௌமி சென்குப்தா கூறியதாவது, 90 வயதில் விருது வழங்குவது என்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி உணர்கிறார் .

பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது.அதனால் இந்த விருதுகளை நிராகரிக்கிறார்.

இந்த விருதை நிராகரிப்பது எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பது எதிர்க்கவே இந்த விருதை பெற எனது தாயார் மறுக்கின்றார் என்றார்.

இதேவேளை  பத்ம விருதுகளை ஏற்க போவதில்லை என மேற்குவங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

#WorldNews

Exit mobile version