கோவேக்ஸினுக்கு அனுமதி வழங்கியது பஹ்ரைன்

Covaxin 1

Covaxin

பஹ்ரைன் கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அவசரக் கால அனுமதியை பஹ்ரைன் அரசு வழங்கியுள்ளதாக இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார மையம் அனுமதி வழங்கப்படாத நிலையில் சில நாடுகள் மட்டும் கோவேக்ஸின் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில், பஹ்ரைன் நாட்டிலும் கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கக் கோரி பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, கோவேக்ஸின் தடுப்பூசிக்கு பஹ்ரைன் அரசு அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளதாக அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்கும் பணியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு கோவேக்ஸின் தடுப்பூசிக்கான அனுமதியை விரைவில் வழங்கும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

#world

Exit mobile version