வடகொரியா ஏவிய செயற்கைக்கோளினால் போர் பதற்றம்

tamilni 361

வடகொரியா ஏவிய செயற்கைக்கோளினால் போர் பதற்றம்

வடகொரியா ஏவியுள்ள உளவு செயற்கைக்கோளினால் வடகொரிய-தென்கொரிய எல்லைகளில் போர் பதற்றம் நிலவும் நிலை காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவி இருப்பதால், வட கொரிய எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தப்போவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அதி நவீன ஆயுதங்களுடன் தனது எல்லையில் இராணுவத்தை குவிக்கப்போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இருநாடுகள் இடையே போர் பதற்றத்தை தணிக்கும் விதமாக 5 ஆண்டுகளுக்கு முன் எல்லையை ஒட்டி 5 கிலோமீட்டர் சுற்றளவில் இராணுவத்தை குவிக்கவோ, போர் ஒத்திகை மேற்கொள்ளவோ கூடாது என ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவியதை கண்டித்துள்ள தென்கொரிய அரசு, 2018 ஆம் ஆண்டு வடகொரியா உடன் மேற்கொண்ட இராணுவ ஒப்பந்தத்தின் சில விண்ணப்பங்களை இரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version