rtjy 225 scaled
உலகம்செய்திகள்

வாக்னர் தலைவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த புடின்

Share

வாக்னர் தலைவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த புடின்

வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ப்ரிகோஷின் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புடின், “திறமையான தொழிலதிபர், 1990களில் இருந்து அவரை நன்கு அறிவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரிகொஜின் தனது வாழ்வில் மிகப்பெரிய தவறுகளை செய்துள்ளார், ஆனால் அவர் தேவையான முடிவுகளையும் அடைந்தார்.

பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விபத்து குறித்து புலனாய்வாளர்கள் தெரிவிக்கும் விவரங்களை ரஷ்யா தீவிரமாக ஆராயும், ஆனால் சம்பவம் தொடர்பான பிற விவரங்களுக்கு கூடுதல் நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

இதேவேளை உலக புகழ்பெற்ற தொழிலதிபரான எலான் மஸ்க் வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம் நினைத்ததை விட தாமதமாக அரங்கேறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமன்றி வாக்னர் கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய உளவுத்துறையால் கொல்லப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பலர் முன்னரே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...