உலகம்செய்திகள்

வாக்னர் கூலிப்படை தளபதி எவ்ஜெனி ப்ரிகோஜின் எங்கு இருக்கிறார்?

Share
வாக்னர் கூலிப்படை தளபதி எவ்ஜெனி ப்ரிகோஜின் எங்கு இருக்கிறார்?
வாக்னர் கூலிப்படை தளபதி எவ்ஜெனி ப்ரிகோஜின் எங்கு இருக்கிறார்?
Share

வாக்னர் கூலிப்படை தளபதி எவ்ஜெனி ப்ரிகோஜின் எங்கு இருக்கிறார்?

ரஷ்யாவின் கூலிப்படை தளபதி யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரிகோஜின் தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பதாகவும், அவரது வாக்னர் கூலிப்படை வீரர்கள் புடினுக்கு எதிரான கிளர்ச்சிக்கு முன்பு அவர்கள் வாழ்ந்த முகாம்களில் இருப்பதாகவும் பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், பிரிகோஜின் பெலாரஸில் இருப்பதாக கூறிய லுகாஷென்கோ, இன்று (வியாழக்கிழமை) சர்வதேச செய்தியாளர்களிடம் கூலிப்படைத் தலைவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருப்பதாகவும், வாக்னரின் வீரர்கள் இன்னும் தங்கள் முகாம்களில் இருப்பதாகவும் கூறினார். ஆனால், முகாம்கள் அமைந்துள்ள இடத்தை அவர் குறிப்பிடவில்லை.

பிரிகோஷின் கூலிப்படையினர் தங்கள் கிளர்ச்சிக்கு முன் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டனர். அவர்கள் தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானுக்குள் நுழைந்து அங்குள்ள இராணுவத் தலைமையகத்தைக் கைப்பற்றினர்.

வாக்னர் குழு உக்ரைனை சீர்குலைக்க ரஷ்யாவால் பணியமர்த்தப்பட்ட ஒரு கூலிப்படை. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, புட்டினிடம் இருந்து ரஷ்ய இராணுவம் பெற்ற அதே முக்கியத்துவத்துடன் வாக்னர் குழுவும் அதன் தலைவர் பிரிகோஷினும் போரிட்டனர்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...