24 663331f956207
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

Share

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பின் தாக்கம்: மூடப்பட்ட விமான நிலையங்கள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு காரணமாக அந்த நாட்டின் 7 சர்வதேச விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையை கக்கியபடி வெடித்து சிதறத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் அமைதியாகிய நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை வெடித்து சிதறத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தீவில் உள்ள எரிமலை அடிவார குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வரும்நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உட்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...