tamilni 345 scaled
உலகம்செய்திகள்

புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் – விளாடிமிர் புடின்

Share

புற்றுநோய்க்கு தீர்வு காணும் ரஷ்யா! நெருங்கிவிட்டோம் – விளாடிமிர் புடின்

புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கொடூர நோயான புற்றுநோய்க்கு தடுப்பு மருந்துகளை உருவாக்க உலகின் பல நாடுகள் தீவிர முயற்சில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் புற்றுநோய்க்கான தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோ மன்றத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி குறித்து பேசினார்.

அவர் கூறுகையில், ‘புதிய தலைமுறையின் புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் Immunomodulatory மருந்துகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம்.

விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும். அவை தனிப்பட்ட சிகிச்சை முறைகளாக திறம்பட பயன்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின்போது ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...