19 5
இலங்கைஉலகம்செய்திகள்

விதிமீறல் குற்றச்சாட்டு: இலங்கை வீரர் தகுதி நீக்கம்

Share

விதிமீறல் குற்றச்சாட்டு: இலங்கை வீரர் தகுதி நீக்கம்

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் விதிமீறல் குற்றச்சாட்டில் இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

2ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய அவர், போட்டியை 44.75 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், மூன்று அரை இறுதிப் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அருண தர்ஷன TR 17.2.3 என்ற தடகள விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்படி மூன்று அரை இறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளனர்.

முதலாவது அரை இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் குவின்சி ஹோல் (43.95 செக்.), ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (44.33 செக்.) ஆகியோரும், 2ஆவது அரை இறுதிப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (43.78 செக்), ஸம்பியா வீரர் முஸாலாக சாமுகொங்கா (43.81 செக்.) ஆகியோரும், கடைசி தகுதிகாண் போட்டியில் பிரித்தானிய வீரர் மெத்யூ ஹட்சன் – ஸ்மித் (44.07 செக்.), அமெரிக்க வீரர் மைக்கல் நோர்மன் (44.26 செக்.) ஆகியோர் இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர்.

அவர்களுடன் ஒட்டுமொத்த நிலையில் அடுத்த அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் பெய்லி (44.31 செக்.), நைஜீரிய வீரர் சாமுவேல் ஒகாஸி (44.41 செக்.) ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...