10 21 scaled
உலகம்செய்திகள்

விஜய் இதைத் தவிர்த்திருக்கலாம், கெட்ட வார்த்தை இப்ப ஒரு ஸ்டைலாக மாறிட்டுது!

Share

விஜய் இதைத் தவிர்த்திருக்கலாம், கெட்ட வார்த்தை இப்ப ஒரு ஸ்டைலாக மாறிட்டுது!

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்தத் திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தில்  த்ரிஷா, அர்ஜுன்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், பகத் பாசில், சாண்டி, அர்ஜூன் தாஸ்,பிரியா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த மாதம் 30ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இடைநிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகளோடு, விஜய் பேசும் கெட்டவார்த்தை படத்திற்கு வழக்கம்போல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. முன்னணி நடிகர் ஒருவர் இப்படி தரக்குறைவாக வார்த்தை பேசலாக என்கிற குற்றச்சாட்டு முன்வந்துள்ளது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ட்ரெய்லர் குறித்த ஒரு சுவாரஸியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

அதில், ட்ரெய்லர் ரசிகர்கள் கொண்டாடும் ட்ரெய்லராக இருக்கிறது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ரொம்ப விறுவிறுப்பாக இருக்கிறது. விஜய் என்ன செய்தால், ரசிகர்களுக்கு பிடிக்குமோ அது இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது.ஆனால், ட்ரெய்லரில் வரும் ஆபாச வார்த்தையை தவிர்த்து இருக்கலாம். ஏன் என்றால், விஜய்க்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து இருக்கும் விஜய், தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

ட்ரெய்லர் வெளியாகி சில மணி நேரத்திலேயே நான்கு மில்லியன் பாலோவர்கள் பார்க்கிறார்களை கடந்துள்ளது. அப்படி இருக்கும் போது இப்படி கெட்டவார்த்தை வருவதை தவிர்த்து இருக்கலாம். விஜய் படங்களில் கெட்டவார்த்தை வராது என்று விஜய் தார்மீகமாக ஒரு முடிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆனால், இன்றைய இளம் இயக்குநர்களின் பல திரைப்படங்களில் கெட்டவார்த்தை இருப்பதை ஸ்டைலாகப் பார்ப்பதால், பல திரைப்படங்கள் கெட்டவார்த்தையுடன் தான் வெளியாகியின்றன என்றும் கூறியிருக்கிறார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...