Untitled 1 46 scaled
சினிமாபொழுதுபோக்கு

600 கோடி பட்ஜெட் படத்தின் ஹீரோவுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

Share

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அதன் பின் “கைதி” படத்திற்கு மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கு அடுத்த விஜய் நடிப்பில் உருவான “மாஸ்டர்” படத்தை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார். இந்த ஹிட் படங்களின் வரிசையில் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து “விக்ரம்” படத்தை இயக்கி பெரிய ஹிட் கொடுத்துள்ளார்.

மேலும் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸை வைத்து இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படம் அவர்கள் இருவரின் திரை வாழ்விற்கு பெரிய மாற்றமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் ரஜினியுடன் இணைவார் என எதிர்பார்த்த சூழலில், ரஜினி “ஜெய் பீம்” இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதால், அதை முடித்து விட்டு லோகேஷுடன் இணைவார் என சொல்லப்படுகிறது.

பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஆதிபுருஷ் மற்றும் தற்போது உருவாகி வரும் Project K என இரு திரைப்படங்களும் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...