காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாப்பரசர்

tamilni 570

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாப்பரசர்

பாப்பரசர் பிரான்சிஸ் (87) லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து பாப்பரசர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வத்திக்கான் தேவாலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

லேசான காய்ச்சல் காரணமாக பாப்பரசர் பிரான்சிஸ் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது அன்றாட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் பாபர்பரசருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சை நடந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version