குழந்தைகளுக்கு தடுப்பூசி!
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பெரும்பாலான நாடுகளில் பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடல் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் உலகில் முதல்முறையாக கியூபாவில் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதேவேளை, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடுள்ளன.
எனினும் உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment