15 13
உலகம்செய்திகள்

கனடாவில் வேலை இழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Share

கனடாவின் (Canada) வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 6.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ளெியிட்டள்ளன.

மார்ச் மாதத்தில் 0.1 சதவிகிதமாக உயர்ந்த நிலையில், ஏப்ரலில் மேலும் 0.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்த உயர்வால், வேலைவாய்ப்பு வீதம் 2024 நவம்பரில் இருந்த நிலைக்கு திரும்பியுள்ளது.

இது, 2020 மற்றும் 2021-ல் ஏற்பட்ட கோவிட் பாண்டமிக் ஆண்டுகளை தவிர்த்தால், 2017 ஜனவரிக்குப் பின் கனடா கண்டுள்ள அதிக வேலையின்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வேலை தேடியவர்கள் கடந்த ஆண்டு இதே காலத்தை விட அதிக சிரமங்களை சந்தித்த நிலையில், மார்ச் மாதத்தில் வேலை இல்லாதவர்களில் 61 சதவிகிதம் ஏப்ரலிலும் வேலைவாய்ப்பு பெற முடியாமல் இருந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரலில் மொத்த வேலை வாய்ப்பு பெரிதாக மாற்றம் இல்லாமல் இருந்துள்ளது.

அதாவது, வேலைவாய்ப்பு வீதம் 0.1 சதவிகிதம் குறைந்து 60.8 சதவிகிதமாக இருந்த நிலையில், 15 முதல் 69 வயதுடைய ஊழியர்களில் 13.2 சதவிகிதம், எதிர்வரும் ஆறு மாதங்களில் தங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்த்துள்ளனர்.

அமெரிக்கா சார்ந்த ஏற்றுமதித் தொழில்களில் பணியாற்றும் ஊழியர்களில் இந்த எண்ணிக்கை 18.6 சதவிகிதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...