38
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

அமெரிக்காவில் கடுமையாகும் விசா விதிமுறைகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவில் (United States) விசா காலாவதியான பின்னரும் தங்கியிருக்கும் இந்திய (India) மாணவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்காவில் தங்கி படித்து வருகின்ற நிலையில், புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விசா கட்டுப்பாடு நடவடிக்கைகளால் இந்திய மாணவர்களுக்கு நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில், விசா காலாவதி ஆன பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனடிப்படையில், மாணவர் விசா மற்றும் H-1B விசாக்கள் காலாவதியானாலும் நாட்டில் தங்கியிருப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிவிக்கப்படுகின்றன.

இதுகுறித்து குடியேற்ற ஆய்வுகள் மையத்தின் நிபுணரான ஜெசிகா எம்.வாகன் கருத்து தெரிவிக்கையில், “கணிசமான எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தங்கள் விசா காலாவதியான பிறகும் தங்கியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 இந்திய மாணவர்கள் தங்கள் விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனிநபர்கள் தங்கள் மாணவர் விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், அவர்கள் கல்வியை முடித்தவுடன் நாட்டைவிட்டு வெளியேறுவதை உறுதி செய்யவும் கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...