37
இலங்கைஉலகம்செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

Share

ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி: சிதறடிக்கப்படும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்

புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவின் (U.S) குடிவரவு மற்றும் சுங்க நடைமுறையாக்க துறையின் (ICE) தடுப்பு காவலில் இலங்கையர்கள் உட்பட 1,445,549 குடியுரிமை பெறாதவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, குறித்த நடவடிக்கைளின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புகள் இல்லாததால் பெரும்பாலும் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அனைத்து நாடுகளும் தங்கள் குடிமக்களின் குடியுரிமையை சரிபார்த்து, பயண ஆவணங்களை உடனடியாக வழங்கி, நாடுகடத்தப்படும் விமானங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

இருப்பினும், சில நாடுகள் செயல்முறையை தாமதப்படுத்துவதன் காரணமாக நாடுகடத்தும் செயற்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், நாடுகடத்தப்படவுள்ள மக்களை ஏற்றுக்கொள்வதனை இதுவரை 15 நாடுகள் தாமதமிக்கியுள்ளதுடன், அவற்றின் பட்டியலையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், வெளியிடப்பட்ட பட்டியலில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...