காவல் அதிகாரி முன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்த 14 வயது சிறுமி
அமெரிக்காவில் 14 வயது சிறுமி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Cloud County ஷெரிப் அலுவலகத்திற்கு கடந்த 16ஆம் திகதி, ஜெய்லி சில்சன் என்ற 14 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து துணை காவல் அதிகாரி ஜெய்லியை, கன்சாஸ் மாகாணம் அரோராவில் ஒரு வெளிப்புற விருந்தில் இருப்பதை கண்டுபிடித்தார்.
பின்னர் அச்சிறுமியை தனது வாகனத்திற்கு வரும்போது, திடீரென அவர் துப்பாக்கி ஒன்றை எடுத்து தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.
அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டைவிட்டு வெளியேறிய மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் சிறுமியின் பெற்றோர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.