உலகம்செய்திகள்

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

14 37
Share

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா: ட்ரம்பின் முடிவு

பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேற மீண்டும் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பல முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார் ட்ரம்ப்.

அவற்றில், பாரீஸ் ஒப்பந்தம் என்னும் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணமும் ஒன்று.

பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்குச் சட்டப்பூர்வமாக கையொப்பமிட்டவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

2015 ஆம் ஆண்டு முதல் முறையாக, புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தவும் அதன் தாக்கங்களை நிவர்த்தி செய்யவும் ஒரு பெரிய கூட்டு முயற்சிக்கு அரசாங்கங்கள் கூட்டாக ஒப்புக்கொண்டன.

ஆனால், ட்ரம்ப் 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்கா மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்தது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், தான் பதவியேற்ற சிற்து நேரத்திலேயே, மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்பான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...