உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் : அமெரிக்கா எச்சரிக்கை

WhatsApp Image 2024 12 12 at 2.03.40 PM

உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் : அமெரிக்கா எச்சரிக்கை

உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் (Ukraine) மீது ரஷ்யா (Russia) பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா (United States) எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து, உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியதையடுத்து இதை ரஷ்யா வெற்றிகரமாக முறியடித்ததுடன் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டிய நிலையில், நாங்கள் ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணையை சோதனை செய்தோம் அத்தோடு இந்த ஏவுகணை உக்ரைன் பகுதியை தாக்கியதன் மூலம் சோதனை வெற்றி பெற்றது என ரஷ்ய ஜனாதிபதி புடின் (Vladimir Putin) அறிவித்தார்.

இந்தநிலையில், உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷ்யாவிடம் ஒருசில ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற ஏவுகணைகளை விட சிறிய வகை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் (Donald Trump), இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version