ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால் ட்ரம்ப் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதனால் மீண்டும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் ஆடம்பரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் பிற பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் மீது பல்வேறு வரிகளை விதித்துள்ளார்.