அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

tamilni 333

அமெரிக்காவில் 22 பேரை காவுகொண்ட துப்பாக்கி சூடு சம்பவம்

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 22 பேர் உயிரிழந்ததோடு 60 பேர் காயமடைந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய மர்ம நபரான ராபர்ட் கார்டு கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சியும் அந்த நபரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

நகரின் பல்வேறு இடங்களில் அதிக அளவிலான துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையினால் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி பொலிஸார் நேற்றிரவு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,

“துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரான ராபர்ட் கார்டு என்பவரை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அந்த நபர் ஆயுதங்களுடன் இருக்கலாம். ஆபத்து நிறைந்தவர் என்றும் தெரிகிறது. அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்”என தெரிவித்துள்ளனர்.

Exit mobile version