கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா
உலகம்செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

Share

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வட கொரியாவை சீண்டும் அமெரிக்கா

கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலைக்கு மத்தியில் அமெரிக்காவின் இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலான ஒன்- அபோலிஸ் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியாவை சென்றடைந்த விடயம் சர்வதேச சூழலில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நீர்மூழ்கி கப்பல் நேற்றையதினம்(24.07.2023) தென்கொரியாவின் தென்பகுதித் தீவான ஜெஜு துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

கொரியப் போருக்குப் பின்னர், நாற்பதாண்டுகள் கழித்து, முதல் முறையாக, கடந்த வாரம் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டது.

யுஎஸ்எஸ் கெண்டக்கி எனும் அமெரிக்காவின் குறித்த கப்பல் 1980ற்கு பின்னர் முதன்முறையாக தென்கொரியாவை சென்றடைந்துள்ளது.

வடகொரியாவின் அணுஆயுதத் தாக்குதலை எதிர்கொள்வது எப்படி என்பது தொடர்பில், தென்கொரியாவும் அமெரிக்காவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இந்த தருணத்தில் யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பல் மற்றும் தற்போது வருகை தந்துள்ள ஒன்- அபோலிஸ் கப்பல்களின் வருகையானது வடகொரியாவை அமெரிக்கா சீண்டுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் வருகையை எச்சரிக்கும் முகமாக வடகொரியா இரண்டு பொலிக்ஸ்ட்டிக் வகை ஏவுகணைகளை தென்கொரிய கடற்பரப்பில் செலுத்தி தங்கள் வலுவைக் காட்டியுள்ளது.

அதைத் தொடர்ந்தும் கடந்த சனிக்கிழமை தாழ்வாகப் பறந்து இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் சிறு இறக்கை ஏவுகணைகளையும் ஏவியுள்ளது.

இரண்டு தரப்பும் தங்களின் படை பலத்தைக் காட்டிவருவதால், கொரியத் தீபகற்பப் பகுதியில் போர்ப் பதற்றம் கூடியுள்ளது.

இந்த சூழலில், அமெரிக்கப் படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ், ஒன்- அபோலிஸ் ஆகிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் தென்கொரியாவுக்கு வருகைதந்துள்ளன.

மேலும் தற்போது வருகைதந்துள்ள நீர்மூழ்கிக் கப்பலானது இதற்கு முன்ன்ர் தென்கொரியாவிற்கு வருகைதந்த யுஎஸ்எஸ் கெண்டக்கி கப்பலை போல் இல்லை எனவும், அணு ஆயுதங்களைக் கொண்டது அல்ல என்றும், எதிரித் தரப்பு கப்பல்களை அழிக்கக்கூடியது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...