அமெரிக்காவின், பரிந்துரைக்கப்பட்ட மற்றும் சாதாரண மருந்துகளின் விலைகள் கிட்டத்தட்ட உடனடியாக 30வீதம் முதல் 80வீதம் வரை குறைக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை காலை 9:00 மணிக்கு, வெள்ளை மாளிகையில், நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக உத்தரவுகளில் ஒன்றில் நான் கையெழுத்திடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதற்கமைய, பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்துகளின் விலைகள் கிட்டத்தட்ட உடனடியாக 30வீதம் முதல் 80வீதம் வரை குறைக்கப்படும்.
உலகில் எங்கும் மருந்துகளுக்கு மிகக் குறைந்த விலையை செலுத்தும் நாடுகளை போலவே அமெரிக்காவும் அதே விலையை செலுத்தும் ஒரு மிகவும் விரும்பப்படும் நாடாக மாறும் வகையிலான கொள்கை ஒன்றை நான் நிறுவுவேன்.
மேலும் நமது குடிமக்களின் சுகாதாரச் செலவுகள் இதற்கு முன் நினைத்துப் பார்க்காத எண்ணிக்கையில் குறைக்கப்படும். கூடுதலாக, எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டொலர்களைச் சேமிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.