உலகம்செய்திகள்

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Share
6 59
Share

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவருமே பலியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகின்றது.

கடந்த 25 வருடக்காலப்பகுதியில்; நடந்த மிக மோசமான அமெரிக்க விமானப் பேரழிவாக இருக்கக்கூடிய இந்த விபத்தின்போது, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு வோசிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, குறித்த விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து போடோமாக் நதியின் பனிக்கட்டி நீரில் இருந்து குறைந்தது 28 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விபத்தில் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சந்தேகிக்கின்றனர் இடுப்பளவில் ஆழமான நீரில் இருந்து மூன்று பிரிவுகளாக விமானத்தின் உடல் தலைகீழாகக் கண்டெடுக்கப்பட்டது.

உலங்கு வானூர்தியின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் ஜெட் விமானம் வழக்கமான தரையிறக்கத்தை மேற்கொண்டபோது, உலங்கு வானூர்தி அதன் பாதையில் பறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 2001 நவம்பர் 12 ஆம் திகதியன்று நியூயோர்க்கின் பெல்லி ஹார்பரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதில் அதில் பயணித் 260 பேரும் கொல்லப்பட்டதற்குப் பின்னர், நேற்றைய விபத்து, மோசமான அமெரிக்க விமான விபத்தாக கருதப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...