25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

Share

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை நடத்தப்படவிருந்த குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஓமானிய வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி உறுதிபடுத்தியுள்ளார்.

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள அமெரிக்கா முன்வந்தது.

அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று இடம்பெறவிருந்தது.

இருப்பினும், குறித்த சுற்று பேச்சுவார்த்தை தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதவில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய 60 நாள் இறுதி எச்சரிக்கை விடுத்தேன். அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும்! இன்று 61ஆவது நாள்.

நான் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன், ஆனால் அவர்களால் அதை அணுக முடியவில்லை. இப்போது அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...