rtjy 91 scaled
உலகம்செய்திகள்

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

Share

வெளிநாட்டில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்

அமெரிக்காவின், நியூ ஜெர்சி மாகாணத்தில் நால்வர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரத்தை பொலிஸார் தற்கொலையா அல்லது படுகொலை சம்பவமாக என்பது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்க உள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்,இந்த சம்பவம் கொலையாக இருப்பின் அதற்கான காரணத்தை அடையாளப்படுத்தவும் அதிகாரிகள் தரப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

நியூ ஜெர்சி மாகாணத்தின் Plainsboro பகுதியிலேயே இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் நேரப்படி சுமார் 4.30 மணியளவில் பொலிஸார் குடியிருப்பு ஒன்றில் இருந்து இரு சிறார்கள் உட்பட நால்வரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், 43 வயதான தேஜ் பிரதாப் சிங், அவரது மனைவி 42 வயதான சோனல் பரிஹார், இவர்களின் 10 வயது மகன் மற்றும் 6 மகள் ஆகயோரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இருவரும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வருவதாகவும், கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமையை பெற்றதாகவும் அந்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...