25 6903096ee28d6
உலகம்செய்திகள்

அணு ஆயுத சோதனை களத்தில் அமெரிக்கா: ட்ரம்பின் அதிரடி முடிவு உலகிற்கு எச்சரிக்கை

Share

அமெரிக்க அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு அநாட்டு இராணுவத் தலைவர்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பு சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
ரஷ்யா, சீனா போன்ற பிற நாடுகளுடன் இணையாக, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குமாறு ட்ரம்ப் அழைப்ப விடுத்துள்ளார்.

மற்ற நாடுகள் திட்டங்களைச் சோதித்து வருவதால், நமது அணு ஆயுதங்களையும் சமமான அடிப்படையில் சோதிக்கத் தொடங்குமாறு பாதுகாப்பு துறைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என சமூக ஊடகப்பதிவில் கூறியுள்ளார்.
தென்கொரியாவில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தனது கருத்தை சர்வதேசத்துக்கு கூறியுள்ளார்.

அமெரிக்கா வேறு ஏனைய நாடுகளை விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்றும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும், சீனா “தொலைதூர மூன்றாவது இடத்திலும்” இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்கா 1992 முதல் அது அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை. அணுசக்தியால் இயங்கும் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்ததாக ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த சில நாட்களுக்குப் வெளிவந்த செய்தி ட்ரம்பின் திட்டத்தின் மீது சர்வதேசத்தை ஈர்க்க செய்துள்ளது.
மேலும், சீனாவின் அணுசக்தி திட்டம் “5 ஆண்டுகளுக்குள் சமமாகிவிடும்” என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ட்ரம்பின் பதிவில் சோதனைகள் எவ்வாறு நிகழும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. ஆனால் “செயல்முறை உடனடியாகத் தொடங்கும்” என்று அடிகேடிட்டுள்ளார்.
இது நீண்டகால அமெரிக்கக் கொள்கையின் வெளிப்படையான தலைகீழ் மாற்றத்தைக் குறிக்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் குடியரசுக் கட்சி ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பனிப்போர் முடிவுக்கு வந்ததால், இருதியாக அமெரிக்க அணு ஆயுத சோதனை 1992 இல் நடந்தது.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு இருவருக்கும் இடையிலான முதல் நேரடி சந்திப்பிற்காக ஜி ஜின்பிங் தென் கொரியாவில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு ட்ரம்பின் பதிவு வெளிவந்தது

அமெரிக்கா இறுதியாக அணுகுண்டை சோதனை செய்தது செப்டம்பர் 23, 1992 அன்று.
இந்தச் சோதனை அந்நாட்டின் மேற்கு மாநிலமான நெவாடாவில் உள்ள ஒரு நிலத்தடி மையத்தில் இடம்பெற்றுள்ளது.
உலகின் முதல் அணுகுண்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தின் கூற்றுப்படி, டிவைடர் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், அமெரிக்காவால் நடத்தப்பட்ட 1,054வது அணு ஆயுதச் சோதனையாகும்.

லோஸ் வேகாஸுக்கு வடக்கே 65 மைல் (105 கிமீ) தொலைவில் உள்ள நெவாடா சோதனை தளம் இன்னும் அமெரிக்க அரசாங்கத்தால் இயக்கப்படுகிறது.
“தேவைப்பட்டால், அந்த இடம் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு அங்கீகரிக்கப்படலாம்” என்று ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் துணை நிறுவனமான தேசிய அணு அறிவியல் மற்றும் வரலாற்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
image 2b35ae96f8
இலங்கைசெய்திகள்

இந்திய விசா, கடவுச்சீட்டு சேவைகள் இனி நேரடியாக! – நவம்பர் 3 முதல் உயர்ஸ்தானிகராலயங்கள் மூலம் சேவை

எதிர்வரும் 03ஆம் திகதி முதல் இந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய...

images 4 3
இலங்கைசெய்திகள்

கடலில் மிதந்துவந்த திரவம் 2 மீனவர்கள் உயிரிழப்பு

கடலில் மிதந்து வந்த ஒரு போத்தலில் (புட்டியில்) இருந்த திரவத்தை அருந்திய நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த...

25 6902f64dd2465
இலங்கைசெய்திகள்

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு: பொலிஸ் தீவிர விசாரணை

  இலங்கையின் மட்டக்குளி மற்றும் பமுனுகம காவல் நிலையங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில், அடையாளம் தெரியாத...

25 6902e1df2434d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் விவகாரம்: மருத்துவ அறிக்கைகள் மீது நீதிமன்றில் சர்ச்சை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு தமனி அடைப்பு...