அமெரிக்க துணை தூதர் பார்ட்லே கோர்மனை மாஸ்கோவில் இருந்து ரஷ்யா வெளியேற்றியதை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கோர்மன், மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதருக்குப் பிறகு இரண்டாவது மிக மூத்த தலைமையில் முக்கிய உறுப்பினராக இருந்தார்.
ரஷ்யா கோரிய பாதுகாப்பு முன்மொழிவுகள் மற்றும் உத்தரவாதங்கள் தொடர்பில் வாஷிங்டன் ரஷ்யாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு ரஷ்யாவிடமிருந்து பதிலைப் பெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்த சிறிது நேரத்திலேயே ரஷ்யாவின் அமெரிக்க துணை தூதர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
#SrilankaNews
Leave a comment