tamilni 315 scaled
உலகம்செய்திகள்

ரஷ்யாவை துல்லியமாக தாக்கும் அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணை

Share

ரஷ்யா

வை துல்லியமாக தாக்கும் அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ ஏவுகணை

உக்ரைனுக்கு அதிநவீன ‘அட்டாக்கம்ஸ்’ தொலைதூர ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்று ஜோ பைடனைச் சந்தித்து பேச்சுவார்த்தை ஈடுபட்ட போது குறித்த ஆயுதங்களை கோரியிருந்தார்.

அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, அதிநவீன அட்டாக்கம்ஸ் (ஆா்மி டாக்டிகல் மிஸைல் சிஸ்டம்) ஏவுகணைகளை வழங்க பைடன் ஒப்புக்கொண்டாா்.

அடுத்த சில வாரங்களில் அந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

190 கி.மீ வரை சென்று துல்லியத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் உக்ரைனால் எளிதில் தாக்குதல் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவிருக்கும் அட்டாக்கம்ஸ் ஏவுகணைகளில் சாதாரண ஒற்றை வெடிகுண்டுகளுக்குப் பதிலாக, ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் கொத்தணி குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இருந்தாலும், இந்தத் தகவலை அமெரிக்காவோ, உக்ரைனோ உறுதிப்படுத்தவில்லை.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...