26 17
உலகம்செய்திகள்

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு – தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

Share

அமெரிக்க தேர்தலில் பரபரப்பு – தீ வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

அமெரிக்காவில் (USA) தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர்.

 

சிறப்புரிமை மூலம் தபால் வாக்கு உள்ளிட்ட முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றது.

 

இந்நிலையில், ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் வாக்குகளுடன் கூடிய 2 வாக்குப் பெட்டிகளுக்கு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

 

இதைத்தொடர்ந்து வொஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, ஜனாதிபதி ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

 

வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார்.

Share
தொடர்புடையது
01 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சுரேஷ் சலே கைது – இலங்கையின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கிய திருப்பம்!

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான நீண்டகால விசாரணைகளின்...

30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...