gettyimages 1850614060 scaled
உலகம்செய்திகள்

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு

Share

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் இடம்பெற்றுவரும் நிலையில் காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நேற்று (12) வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உள்ள 193 உறுப்பினர்களில், குறித்த யோசனைக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 153 உறுப்பு நாடுகள் காசாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் போர் நிறுத்தத்திற்கு10 நாடுகள் எதிராக வாக்களித்ததுடன் 23 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அமெரிக்கா, பரகுவே, ஆஸ்திரியா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளன.

அத்துடன் பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னர் கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் லிண்டா தோமஸ் க்ரீன் ஃபீல்ட், தற்போது ஏற்படும் எந்த போர் நிறுத்தமும் தற்காலிகமானது எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...