25 8
உலகம்செய்திகள்

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

Share

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் விநியோக நிலையத்தை தாக்கிய உக்ரைன் டிரோன்கள்

ரஷ்ய (Russia) துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை டிரோன்கள் மூலம் உக்ரைன் (Ukraine) தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel Horse எனப்படும் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டு நிலையத்த்தை குறிவைத்து உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணெய் நிலையம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 170 கிமீ தொலைவிலுள்ளது இந்த தாக்குதலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டாலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரஷியாவின் ஓரியோல் மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கிளிச்கோ தெரிவித்துள்ளார்.

தாக்குதலின் போது 11 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன், உக்ரைன் டிரோன்கள் ரஷ்ய எண்ணெய் வசதிகளை அடிக்கடி இலக்கு வைப்பது இந்த தாக்குதலின் மூலம் தெளிவாகிறது.

இதனை உக்ரைன் அதன் இராணுவ இலக்காக கருதுகிறது ஆனால், ரஷ்யா இதைப் தீவிரவாத செயல்கள் என வகைப்படுத்துகிறது.

இதைத் தொடர்ந்து, உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் நிலையங்களை தாக்கும் நோக்குடன் அதிகரித்துள்ளன குறிப்பாக, ரஷ்யாவின் குர்ச்க் பகுதியில் உள்ள சில கிராமங்கள் தற்போது உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...