5000க்கு மேற்பட்டோரை பலியெடுத்த உக்ரைன் – ரஷ்யா போர்!!

1731714 war

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 150-வது நாளை நெருங்கி வருகிறது.

இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 5,110 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6,752 பேர் காயம் அடைந்துள்ளனர்.

உக்ரைன் மீது இரவு, பகல் பாராமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கூறி உள்ளது.

#World

Exit mobile version