உக்ரைன் – ரஸ்யா போர் – அதிகரிக்கும் எதிலிகள்!!

GettyImages 1238751400.7

உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் லட்சக்கணக்கானோர் குவிந்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து 12 நாட்களில் 17 லட்சத்து 35 ஆயிரம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அகதிகளுக்கான ஐ.நா.சபை உயர் அதிகாரி பிலிப்போ கிராண்டி டுவிட்டரில் கூறும் போது, ‘உக்ரைனில் இருந்து 12 நாட்களில் 17 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளது.

இதில் 5-ல் 3 பங்கு, அதாவது கிட்டத்தட்ட 10 லட்சத்து 30 ஆயிரம் பேர் போலந்து சென்றதாகவும், 1,80,000 பேர் ஹங்கேரிக்கும், 1,28,000 பேர் ஸ்லோவாக்கியாவுக்கும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர ருமேனியா உள்ளிட்ட நாடுகளிலும் உக்ரைன் அகதிகளின் வருகை கணிசமாக உள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

#WorldNews

 

 

 

Exit mobile version