ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி
உலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

Share

ஐரோப்பிய நாடுகள் போரினை ஒருபோதும் மாற்றாது: புடின் அதிரடி

உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் வழங்கும் ஆயுதங்களால் போரின் போக்கு மாறப் போவதில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சிமாநாடு சமீபத்தில் இடம்பெற்றது.

இதில், உக்ரைன் விவகாரம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்நிலையில், வில்னியஸ் மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள புடின் , “நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதன் மூலம் ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அதே வேளையில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குவது என்பது உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரித்து மோதலை நீட்டிக்கும்.

250 கிமீ (155 மைல்கள்) பயணிக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு பிரான்ஸ் முடிவுச் செய்துள்ளது.

அந்த ஆயுதங்கள் சேதத்தை ஏற்படுத்தும். ஆனால் அவை போரின் போக்கை மாற்ற போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

நேட்டோ மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசும்போது, “ புடின் உக்ரைன் போரில் தோற்றுவிட்டார்” என்று விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை ஜனாதிபதி புடின் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம், உக்ரைனுக்கு நீண்டகால பாதுகாப்பு வழங்குவதற்கான வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

ஆனால், எப்போது நேட்டோவில் உக்ரைன் இணையும் என்பது குறித்து நேட்டோ தெரிவிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் குறித்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா, பனிப்போர் காலத் திட்டங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் திரும்பியுள்ளன என்பதை இந்த மாநாடு நிரூபிக்கிறது என்று விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...