6 30
உலகம்செய்திகள்

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

Share

ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட உக்ரைன் படையினர்

உக்ரைன்(ukraine) ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய (russia)பாதுகாப்பு அமைச்சகம் இன்று(12) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன.

மொத்தத்தில், உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின் போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது” என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள நோவோவனோவ்கா கிராமத்தின் கட்டுப்பாட்டை ரஷ்யப் படைகள் மீண்டும் பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,(donald trump) உலகில் நடக்கும் போர்களை தான் நிறுத்தப்போவதாக அறிவித்தார்.

இந்த சூழலில் பாரிசில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை சந்தித்த டிரம்ப் ரஷ்யாவிற்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த ரஷ்ய வெளியுறவுத்துறை போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி புடின்(pudin) எப்போதும் தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...