கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்
கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய நிலையில், செவாஸ்டபோல் நகரில் ரஷ்யாவின் கருங்கடல் படைத்தளம் செயல்படுகின்றது.
இந்த கடற்படை தளம் மீதான தாக்குதலில் ரஷ்ய கடற்படை தளம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதனால் கடற்படை தளத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதுடன், இது குறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.