ரஷ்யாவிற்கு கடும் அழுத்தம்
உக்ரைன் தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் எகிப்து ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் புத்துயிர் பெறுவது அத்தியாவசியமானது என்பதுடன் ஏழ்மையான ஆப்பிரிக்க நாடுகளுக்கு அளிக்கும் அவசர தீர்வு எனவும் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,மேற்கத்திய நாடுகள் தங்களது வாக்குறுதியை பின்பற்றவில்லை என தெரிவித்துள்ள புடின், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலவசமாக தானியங்களை வழங்க உறுதியளித்துள்ளார்.
கருங்கடல் பாதையூடாக தானியங்களை வாங்கும் முக்கியமான நாடு எகிப்து எனவும் , தற்போது உணவு பண்டங்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கத்திய நாடுகளின் கொள்கை தவறுகளின் விளைவாகும் என புடின், குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,ஏற்றுமதிக்காக தயார் நிலையில் இருந்த 20 மில்லியன் டன் தானியங்கள் சிக்கிக்கொண்ட நிலையில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தானிய பற்றாக்குறையை உருவாக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Leave a comment