tamilni 257 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

Share

ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகள்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றுள்ளதோடு பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் நேற்று (20.10.2023) பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை விடுதலை செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது மகள் என கூறியுள்ளது.

மேலும், இருவரிடமும் ஜோ பைடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை விடுதலை செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...