துருக்கி- சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் திகதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டது.
நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தனர். வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இதைத்தொடர்ந்து, மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் துருக்கியில் 29,605 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சிரியாவில் 3,574 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக ஐ.நா கணித்துள்ளது.
#world
Leave a comment