9 2
உலகம்செய்திகள்

துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை

Share

துருக்கியே இஸ்ரேலின் அடுத்த இலக்கு: எர்டோகன் எச்சரிக்கை

இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

காசாவில் இராணுவ நடவடிக்கையை நடத்திய பிறகு, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தான் தாக்குதல் நடத்தலாம் என்று எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

அப்போது ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் பல தளபதிகள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இஸ்ரேலின் இந்த தீவிர போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று இரவு ஈரான் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் சில ஏவுகணைகளை தடுத்து இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலின் கடற்கரை நகரங்கள் மற்றும் மத்திய இஸ்ரேலை நோக்கி தொடர்ந்து சென்றது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதலுக்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஈரான் தவறிழைத்து விட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு மற்றும் பயங்கரவாதம் ஏற்கனவே நமது வாசலில் உள்ளது, தற்போது நாம் எதிர்கொள்வது சட்டத்திற்கு கட்டுப்பட்ட நாட்டை அல்ல, இரத்தத்தை உண்ணும் கொலையாளி குழுவுக்கே” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...