turkey 4
உலகம்செய்திகள்

துருக்கி நில நடுக்கம் – இடிபாடுகளில் இருந்து 128 மணி நேரத்துக்கு பிறகு 2 மாத குழந்தை உயிருடன் மீட்பு

Share

துருக்கி – சிரியாவில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் தரை மட்டமான ஆயிரக்கணக்கான வீடு, கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்து மீட்கும்பணி நடந்து வருகிறது. இ

கட்டிட இடிபாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது. இதில் துருக்கியில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இடிபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 100 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.

குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் துருக்கியில் 128 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட மீட்புக்குழுவினர் பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை 128 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 வயது சிறுமி, கர்ப்பிணி பெண், 70 வயது மூதாட்டி ஆகியோரும் உயிருடன் மீட்கப்பட்டனர். காசியான்டெப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதற்கிடையே துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#world #turkey

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...