turkey 8
உலகம்செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் – 11 நாட்களுக்கு பிறகு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிருடன் மீட்பு

Share

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6ம் திகதி அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.

ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகி உள்ளன. பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு துருக்கியில் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அன்டாக்யாவில் உஸ்மான் என்ற 14 வயது சிறுவன் 260 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்டதாக சுகாதாரத்துறை மந்திரி பஹ்ரதின் கோச்சா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், மீட்கப்பட்ட சிறுவன் ஸ்ட்ரெச்சரில் கண்களைத் திறந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

16 16
இலங்கைசெய்திகள்

தேடப்பட்டு வந்த டீச்சர் அம்மாவுக்கு பிணை அனுமதி

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பிரத்யேக வகுப்புகளை நடத்தும், ‘டீச்சர் அம்மா’ என்று...