rtjy 22 scaled
உலகம்செய்திகள்

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

Share

சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும்

இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் கூற வேண்டும் எனவும் துருக்கி ஜனாதிபதி காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் போர், 2 மாதங்களை எட்டவுள்ளது.

இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலை கண்டிக்கும் வகையில் பல்வேறு நாடுகளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு சர்வதேச அளவில் பல்வேறு அழுத்தங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன், இஸ்ரேல் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் ஜனாதிபதி நெதன்யாகுவின் செயல், அவரது அரசுக்கு மட்டுமின்றி அவரை ஆதரிக்கும் நாடுகளுக்கும் கரும் புள்ளியாக மாறி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர்களின் இந்த மௌனத்திற்கு வரும் காலங்களில் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

இதன்படி சுமார் 2,000க்கும் மேற்பட்ட துருக்கி வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக வழக்கு தொடுத்து இருப்பதாகவும், காசா பகுதியில் இன அழிப்பை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் அரசுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஆரம்பம் முதலே துருக்கி ஜனாதிபதி இஸ்ரேலுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக தற்போது துருக்கியை சேர்ந்த வழக்கறிஞர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...