16 5
உலகம்

உக்ரைனை கைவிடுகிறதா அமெரிக்கா..! ட்ரம்பின் முடிவை வரவேற்கும் ரஷ்யா

Share

உக்ரைனை(ukraine) நேட்டோவில்(nato) சேர்க்கும் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின்(donald trump) முடிவுக்கு ரஷ்யா(russia) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான போர் 1,000 நாட்களை கடந்து நடந்து வருகிறது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பைடன்(joe biden) தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தார். மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது ரஷ்யாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்கும் முன்னாள் ஜனாதிபதி பைடனின் முடிவை, தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் கைவிட்டு விட்டார்.

அதாவது, நேட்டோவில் உக்ரைன் இணைய அமெரிக்கா ஆதரவு கொடுக்காது என்று கூறிய அவர், இந்த விவகாரத்தில் பைடன் அமெரிக்காவின் நிலையை மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் முடிவுக்கு ரஷ்யா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ‘உக்ரைன் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி பைடனின் நிர்வாகம் எடுத்த முடிவுகள் குறித்து ட்ரம்ப் முதல் முறையாக பேசியுள்ளார். உக்ரைனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்ற ரஷ்யாவின் விருப்பத்திற்கு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்’ எனக் கூறினார்.

Share
தொடர்புடையது
5 30
உலகம்செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள மற்றுமொரு தடை! நெருக்கடியில் வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்காவில் பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஹார்வர்ட்...

1 26
உலகம்செய்திகள்

கனடாவில் மற்றுமொரு தமிழின அழிப்பு நினைவகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை டொரோன்டோ(Toronto) நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் டொரோன்டோ நகர சபையில் ஏகமனதாக...

25 683094aa5d831
உலகம்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 50 சதவீத வரி விதித்த ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 சதவீத வரி...

25 68309c4654a51
உலகம்செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா பேரின் மிகமுக்கிய ஒப்பந்தம் நடைமுறைக்கு

உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பிலும் கைது செய்யப்பட்ட தலா ஆயிரம் பேரை விடுதலை செய்வதற்கான...